அமைதிக்கு பெயர்தான் சாந்தி,
அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி
நீ கொண்ட பெயரை நான் உரைத்துக்கண்டேன் சாந்தி
நீ காட்டும் அன்பில் நான் கண்டு கொண்டேன் சாந்தி
நீ பெற்ற துயரை நான் கேட்டுத்துடித்தேன் சாந்தி
நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி
அமைதிக்கு பெயர்தான் சாந்தி,
அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி
எல்லோரும் வாழ்வில் தேடிடும் பாக்கியம் சாந்தி
என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி
எது வந்தப்போதும் மறவாத செல்வம் சாந்தி
எனை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே சாந்தி
அமைதிக்கு பெயர்தான் சாந்தி,
அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி
உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் சாந்தி
மண்ணோடு மறையும் நாள் வரை நிலைக்கும் சாந்தி
கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி
பொன்னேடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி ...
படம்: ரயிலில் பயணங்களில்..
இசை: டி.ராஜேந்தர்
பாட்டு: டி.எம்.சவுந்தரராஜன்

0 கருத்துகள்
கருத்துரையிடுக
நேயர் விருப்பப் பாடல்களையும் பின்னூட்டங்களில் தரலாம்.